×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 பேர் சேர்ந்து மாணவரை அடித்தே கொலை செய்த பயங்கரம்.. சென்னையில் நடந்த திடுக்கிடவைக்கும் சம்பவம்.. பரபரப்பு தகவல்.! 

12 ம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. 

Advertisement

கஞ்சா புகைத்ததை தட்டிக்கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

பள்ளி மாணவர்: 

சென்னையில் உள்ள திருவொற்றியூர், புதுத்தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலட்சுமி. தம்பதிகளின் மகன் தனுஷ் (வயது 17). இவர் விம்கோ நகரில் இருக்கும் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு பயின்று வருகிறார். 2 நாட்களுக்கு முன்னதாக பள்ளி முடிந்து வெளியே வந்தபோது, முன்னதாகவே காத்திருந்த சில மாணவர்கள் தனுஷை தாக்கி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: வீரனை குடித்துவிட்டு வீரமாக சில்மிஷம் செய்த வடக்கன்ஸ்.. உள்ளே தூக்கி வைத்த போலீஸ்.! 

மரணம்: 

இந்த சம்பவத்தில் மாணவர் மயங்கி விழுந்த நிலையில், தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல் துறையினர் நேரில் வந்து தனுஷை மீட்டனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

அதிர்ச்சி தகவல்: 

விசாரணையில், தனுஷ்குமார் 11 ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் ஆவார். இதனை தனுஷின் நண்பர் ஜெயதேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் கிண்டலடித்து இருக்கிறார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு உண்டான நிலையில், இருவரின் பகை இரு கோஷ்டி பகையாக மாறியது. இதனிடையே, ஜெயதேஷ் சம்பவத்தன்று பள்ளிக்கு வரவில்லை. மாலை நேரத்தில் தனுஷ் மட்டும் வெளியே வந்தபோது, அவரை சகமானவர்கள் தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் தனுஷ் மயங்கி விழுந்ததும் அனைவரும் தப்பிச்சென்றுவிட, இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார். 

கொலை வழக்கு: 

தனுஷை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அவரின் நபர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷின் பெற்றோர்களோ தங்களின் மகன் பள்ளியில் மாணவர்கள் கஞ்சா புகைத்தது தொடர்பாக பிரச்சனை இருந்தது. தங்களது மகனின் முகத்தில் கஞ்சா புகையை ஊதியது தொடர்பாக வாக்குவாதம் எழுந்து இதில் மகன் கொல்லப்பட்டுள்ளார் என கூறுகின்றனர். 

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #chennai #12th Class Student Murder #திருவொற்றியூர் மாணவர் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story