வீரனை குடித்துவிட்டு வீரமாக சில்மிஷம் செய்த வடக்கன்ஸ்.. உள்ளே தூக்கி வைத்த போலீஸ்.!
Kanchipuram News: போதையில் வம்புசெய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக 2 வடமாநில இளைஞர்கள் உத்திரமேரூருரில் கைது செய்யப்பட்டனர்.
வடமாநில இளைஞர்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பஜார் வீதியில் கூலி வேலை செய்து வருபவர் பிரேம் குமார். இவர் நேற்று மாலை நேரத்தில் வழக்கம்போல தனது பணிகளை கவனித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு 2 வடமாநில இளைஞர்கள் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.!
போதை:
இருவரும் தலைக்கேறிய போதையில் இருந்த நிலையில், அவ்வழியாக சென்ற பெண்களிடம் சில்மிஷம் செய்து இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் இருவரையும் தட்டிகேட்கவே, வடமாநில இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
தாக்குதல் முயற்சி:
ஒருகட்டத்தில் பிரேம் குமாரை இளைஞர்கள் தாக்க முயற்சித்து இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், போதையில் தகராறு & பெண்களிடம் சில்மிஷம் செய்த இளைஞர்களை பிடித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை:
இதனையடுத்து, காவல்துறையினர் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இவர்கள் மேல்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது கமீஸ் (வயது 36), உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விஷால் ராஜ்பாரி (வயது 29) என்பது தெரியவந்தது. இருவரும் விசாரணைக்குப்பின் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கோவை மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!