கோவை மூதாட்டி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்.!
Coimbatore News: செல்போனுக்காக மூதாட்டி கோவையில் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
போதையில் இருந்த சிறுவன் மூதாட்டியை கொன்று செல்போனை பறித்துச் சென்றார்.
மூதாட்டி:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம், கருப்புக்கால் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (வயது 58). இவரின் கணவர் இறந்துவிட்டார். சாந்திக்கு ராஜா என்ற 35 வயது மகனும், அமுதா என்ற 30 வயது மகளும் இருக்கின்றனர். அமுதா திருமணமாகி கணவர் & குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: உயிரைப்பறித்த கொசு மருந்து? கோவையில் நடந்த சோகம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் விபரீதம்.!
ரத்த வெள்ளம்:
மகன் ராஜா மருத்துவரின் வீட்டில் தங்கியிருந்தபடி சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்த நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
17 வயது சிறுவன்:
சம்பவ இடதிதில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் மீது சந்தேகம் எழுந்தது. சிறுவனை பிடித்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
போதை:
அதாவது, சம்பவத்தன்று போதையில் இருந்த சிறுவன், மூதாட்டி சாந்தியின் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தமிட்டு நிலையில், சிறுவன் அவரை மரக்கட்டையால் பலமாக தாக்கி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன், செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது. விசாரணைக்குப்பின் சிறுவனை கைது செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் ரணகொடூரம்.. கஞ்சா விற்பனை புகார் கொடுத்ததால் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை..!