×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவையில் ரணகொடூரம்.. கஞ்சா விற்பனை புகார் கொடுத்ததால் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை..!

Coimbatore News: கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்த மாணவர் கொலை செய்யப்பட்டார். 

Advertisement

கல்லூரியில் நடக்கும் சட்டவிரோத செயல் தொடர்பாக புகார் அளித்த மாணவர் கொல்லப்பட்ட பயங்கரம் கோவையில் நடந்துள்ளது. 

கல்லூரி மாணவர்: 

Coimbatore College Student Killed: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்குவெந்தல் பகுதியில் வசித்து வருபவர் கென்னடி. இவரின் மனைவி சுமதி. தம்பதிகளுக்கு 19 வயதுடைய அமுதன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்து, மூன்றாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் துறையில் பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: 300 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்.. 3 பேர் பரிதாப பலி.. நொடியில் அரங்கேறிய சோகம்.! 

சீனியர்: 

இதே கல்லூரியில் தீபக் என்ற 20 வயதுடைய இளைஞர் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் அங்குள்ள பூங்கா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறையெடுத்து தங்கி இருக்கிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக அமுதன் மண்டபம் பகுதியில் அறையெடுத்து, இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவருடன் தங்கி இருக்கிறார். அமுதன் - தீபக் இடையே முன்னதாகவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனிடையே,  நேற்று முன்தினம் அமுதன் நண்பர்கள் 7 பேருடன் தீபக்கின் அறைக்கு முகமூடி அணிந்து சென்றுள்ளார். 

தாக்குதல்: 

அங்கு தீபக் உள்ளிட்ட பலரின் மீது தாக்குதல் நடக்க, அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின் தீபக்கின் செல்போனை பறிக்க முயன்றபோது, தீபக்கின் மாஸ்க் கழன்று அடையாளம் தெரிந்தது. பின் நேற்று காலை 9 மணியளவில் அமுதன் கல்லூரிக்கு வந்தார். அச்சமயம் அங்கு வந்த தீபக் உட்பட 20 பேர் கும்பல், அமுதனை கடத்திச்சென்று மைதானத்தில் வைத்து கத்தியால் குத்தி, இரும்பு ராடால் தாக்கி இருக்கிறது. 

மயக்கம்: 

இந்த தாக்குதலில் அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரை யாருக்கும் தெரியாமல் அறைக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர். அங்கு அவர் உறங்குவதாக நினைத்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் பேச்சு-மூச்சின்றி இருந்துள்ளார். காலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் பின் மதியம் வந்தபோது மயக்கம் தொடர்ந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மரணம்: 

அங்கு நடந்த பரிசோதனையில் அவரின் maranam உறுதி செய்யப்படவே, காவல்துறையினர் அமுதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது. 

தாய் பேட்டி: 

மகனின் மரணம் குறித்து அமுதனின் தாய் சுமதி தெரிவிக்கையில், "கல்லூரியில் நடைபெறும் கஞ்சா விற்பனை குறித்து மகன் நிர்வாகத்திடம் புகார் அளித்து இருந்தார். மாணவர்களை கட்டிக்கொடுத்த ஆத்திரத்தில் அவர்கள் முன்பே எனது மகனை தாக்கி இருந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் எனது மகனை வெளியே தங்குமாறு அனுப்பி வைத்தனர். இதனால் நண்பர்கள் அறையில் தங்கியிருந்த அமுதனை இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். சித்ரவதை செய்து எனது மகனை கொலை செய்துள்ளனர். படிக்கத்தான் அவரை அனுப்பி வைத்தோம். கல்லூரி நிர்வாகம் இதுவரை வாய் திறக்கவில்லை. நாங்கள் உடலை வாங்கப்போவதில்லை" என தெரிவித்தார். 

கைது: 

பின் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூரை சேர்ந்த 17 வயது மாணவர், கடலூரைச் சேர்ந்த ஆராமுதன் (வயது 20), சிவகங்கையைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20), திருவாரூரைச் சேர்ந்த சிவா ரோகித் (வயது 20), மணிபாலு (வயது 20) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான தீபக் தேடப்பட்டு வருகிறார்.  

இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #college student #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story