திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.!
கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
ஒருவரை அடித்துக்கொலை செய்து திரைப்பட பாணியில் ரீல்ஸ் வெளியிட்ட சிறார்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
நண்பர்கள்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், உதயம் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். இவரின் மகன் அஸ்வின் (வயது 22). இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவரின் மகன் மாதேஷ் (வயது 22). மாதேஷின் நண்பர் 16 வயது சிறுவன்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.. கொலை வழக்கால் நடந்த சோகம்.!
வாக்குவாதம்:
இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், நேற்று முன்தினம் மற்றொரு நண்பரான விக்னேஷ் என்பவரின் காலி வீட்டில் மதுபானம் குடித்து இருக்கின்றனர். பின் போதை தலைக்கு ஏறியபின், மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்:
இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிறுவன், மாதேஷ் சேர்ந்து அஸ்வினின் தலையில் சுத்தியலால் கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். மேலும், உயிருக்கு நண்பர் போராடியபோதும், துடிதுடிக்க கழுத்தை அரிவாள் & கத்தி கொண்டு அறுத்து கொடூரமாக கொலை செய்து இருக்கின்றனர்.
மரணம்:
நண்பர் உயிரிழந்த பின் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் கேட்ட அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அஸ்வின் இறந்து கிடப்பதை பார்த்து கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கவத்துறையினர் விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு:
விசாரணையில் இளைஞர்கள் அஸ்வினை கொலை செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்டதும் தெரியவந்தது. கொலை சம்பவத்துக்குப்பின் தலைமறைவான குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடியூபர் சவுக்கு சங்கர் மகன் தியோ ஆழிசை தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்..! 13 வயதில் நடந்த சோகம்.!