சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒவ்வொரு நாளாக நடந்த கொடுமை.. காதலனுக்காக கண்டுகொள்ளாத கொடூர தாய்.!
Chennai News: ஆறாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைதாகினார்.
பாலியல் தொல்லை கொடுப்பது குறித்து தாயிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில், அதிகாரிகள் தாயின் ஆண் நண்பரை போக்ஸோவில் கைது செய்தனர்.
12 வயது சிறுமி:
சென்னையில் உள்ள தாம்பரம், சேலையூர் பகுதியில் 40 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவர் கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருகிறார். பின் புதுவஞ்சேரி பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சேர்ந்து வசிக்கத்தொடங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: Krishnagiri News: 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பள்ளிமுடிந்து வரும்போது கொடூரம்.. மூவர் கும்பல் கொடூர செயல்.!
சிறுமி:
பெண்ணுடன், அவரின் ஆறாம் வகுப்பு பயிலும் 12 வயது மகளும் வசித்து வந்துள்ளார். இதனிடையே, மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்துபோன சிறுமி, இதுகுறித்து தாயிடம்க் பலமுறை தெரிவித்தும் பலனில்லை.
ஆசிரியரிடம் கூறினார்..
மோகன்ராஜின் செயல்கள் ஒவ்வொரு நாளும் எல்லைமீறிச் சென்ற நிலையில், அவர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் இதுகுறித்து கூறி இருக்கிறார். சிறுமி கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போக்ஸோவில் கைது:
இதன்பேரில் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி மோகன்ராஜை கைது செய்தனர். தாயிடமும் இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், தாய்க்கு விபரம் அறிந்தும் புகார் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது.!