இப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கலையை..! இன்ஸ்டாகிராம் தோழியை வீட்டில் தங்க வைத்த பெண்! இறுதியில் குடும்பத்துக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... பகீர் பின்னணி..!!!
விசாகப்பட்டினத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண், உடல்நிலை சரியில்லை எனக் கூறி வீட்டில் தங்கியிருந்து வைரம், தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண் ஒருவர், வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து நகைகளைத் திருடிச் சென்றதாக விசாகப்பட்டினத்தில் புகார் எழுந்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று கூறி வீட்டில் தங்கிய அந்தப் பெண், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வைரம் மற்றும் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த அறிமுகம்
விசாகப்பட்டினத்தின் அக்கய்யபாலம் நான்காம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனேஹள்ளி நீரஜா என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் நீரஜாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: BREAKING : ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்திய CM விஜய்...! தொழிலாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!,
அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய அவர், நீரஜாவின் வீட்டிலேயே சில நாட்கள் தங்கியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களின் நம்பிக்கையையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
வைரம், தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயம்
வீட்டில் தங்கியிருந்தபோது படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அந்தப் பெண் கவனித்துள்ளார். பின்னர், சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த அவர், 11.3 கிராம் எடையுள்ள வைர நெக்லஸ், மற்ற வைர நகைகள் மற்றும் தங்க ஆபரணங்களை எடுத்துச் சென்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைகள் காணாமல் போனதை அறிந்த நீரஜா, இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டில் தங்கியிருந்த பெண் யார், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.