×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 நாட்கள் மாறுவேடத்தில் கடைக்குள் சென்ற நிஷாந்த்! 15 கிலோ தங்கம் கொள்ளை...! காதலி போட்டுகொடுத்த பிளான்.. லிஃப்ட் வழியாக உள்ளே புகுந்தல்! பொதுமக்களுக்காக போலீஸ் வெளியிட்ட அதிரவைக்கும் AI காட்சி..!!!

மதுரை தனியார் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நிஷாந்த் செயல்பட்ட விதத்தை விளக்கும் AI வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிஷாந்த் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கொள்ளையை அவர் எப்படித் திட்டமிட்டு அரங்கேற்றினார் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் கடையை நோட்டமிட்ட நிஷாந்த்

கடந்த 12-ஆம் தேதி அதிகாலையில் நடந்த இந்தக் கொள்ளையில், சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டன. இதன் மதிப்பு ரூ.21 கோடி எனக் கூறப்படுகிறது. வழக்கை விசாரிக்க 9 தனிப்படைகளை அமைத்த போலீசார், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், பழங்காநத்தத்தைச் சேர்ந்த 25 வயதான நிஷாந்த் தனி ஆளாகக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.21 கோடி தனிஷ்க் கொள்ளை...! 4 நாளாக போலீஸ்சிடம் தண்ணி காட்டும் நிஷாந்த்...! காதலியின் வீட்டு கடனை அடைக்க போட்ட மாஸ்டர் பிளான்.!!!

மாறுவேடத்தில் வந்து நகைகளை அள்ளிச் சென்றார்

கொள்ளைக்கு முன்பாக தொடர்ந்து மூன்று நாட்கள் மாறுவேடத்தில் கடைக்குச் சென்று நிஷாந்த் நோட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர். திட்டமிட்ட நாளில் அதிகாலையில் மின்தூக்கி வழியாக கடைக்குள் நுழைந்த அவர், முகமூடி, தொப்பி மற்றும் கையுறைகளை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட நிஷாந்த், கடையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக போலீசார் வெளியிட்டுள்ள AI வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. கொள்ளை நடந்த விதத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

காதலி, தந்தை கைது; 5.5 கிலோ நகைகள் மீட்பு

இந்தக் கொள்ளைக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்து, தப்பிச் செல்ல இருசக்கர வாகனமும் வழங்கியதாகக் கூறப்படும் நிஷாந்தின் காதலியும் சமூக வலைதளப் பிரபலமுமான மீனாட்சி, அவரது தந்தை சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, நிஷாந்த் தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார் . அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மீதமுள்ள நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறியவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: ரூ.21 கோடி தனிஷ்க் கொள்ளை...! 4 நாளாக போலீஸ்சிடம் தண்ணி காட்டும் நிஷாந்த்...! காதலியின் வீட்டு கடனை அடைக்க போட்ட மாஸ்டர் பிளான்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மதுரை நகைக்கடை கொள்ளை #Nishanth Robbery #AI Video #ரூ.21 கோடி நகைகள் #மீனாட்சி கைது
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story