×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.21 கோடி தனிஷ்க் கொள்ளை...! 4 நாளாக போலீஸ்சிடம் தண்ணி காட்டும் நிஷாந்த்...! காதலியின் வீட்டு கடனை அடைக்க போட்ட மாஸ்டர் பிளான்.!!!

மதுரை நேரு நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளி நிஷாந்த்தைத் தேடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளி நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட அவரது தந்தை மற்றும் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 கிலோ நகைகளை கொள்ளையடித்த இளைஞர்

கடந்த நவம்பர் 12-ம் தேதி, நேரு நகரில் செயல்பட்டு வந்த தனிஷ்க் நகைக்கடைக்குள் முகத்தை கருப்புத் துணியால் மறைத்தபடி மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கடையில் இருந்த சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்துக்கொண்டு அவர் தப்பிச் சென்றார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.21 கோடி என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்து நிலையத்திலே இப்படியா..? மக்கள் கண்முன்னே அரசு நடத்துநரை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்! குலை நடுங்கவைக்கும் சம்பவம்...!!!

போலீசார் நடத்திய விசாரணையில், இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது மதுரையைச் சேர்ந்த சுரேஷின் மகன் நிஷாந்த் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது காதலியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி (23), தந்தை சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மாடக்குளம் கண்மாய் கரைப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6 கிலோ நகைகளையும் மீட்டனர்.

காதலியின் வீட்டுக் கடனை அடைக்கத் திட்டம்?

மீனாட்சியின் வீட்டுக் கடனை அடைப்பதற்காகவே நிஷாந்த் பல நாட்களாகத் திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த நிஷாந்த், மீனாட்சி இருவரும் இணைந்து 'மீனாட்சி நாச்சியார்' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்ததனர்.

4 நாட்களாக தலைமறைவு; போலீசார் தீவிர தேடுதல்

நிஷாந்த்தின் தந்தையும் காதலியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளியான அவர் மட்டும் கடந்த நான்கு நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இடம் மாறித் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தமிழகத்திற்குள் பதுங்கியுள்ளாரா அல்லது வெளிமாநிலத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிதாகத் திறக்கப்பட்ட நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைக் கைது செய்து, கொள்ளையில் தொடர்புடைய மற்ற விவரங்களைக் கண்டறிவதே போலீசாரின் அடுத்தகட்ட நடவடிக்கையாக உள்ளது.

 

இதையும் படிங்க: கணவரை கண்டித்த மனைவி..! இருந்தாலும் அடங்கல.. ரகசியமாக பின்தொடர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி! அலறி துடித்த காதலி..... நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மதுரை நகைக்கடை கொள்ளை #Tanishq robbery #நிஷாந்த் #ரூ.21 கோடி நகைகள் #Madurai Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story