×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு மறுத்த தாய்மாமன் மகள்.. ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூர கொலை.. குறுக்கே வந்த தாய்.. விருதுநகரில் பரபரப்பு.!

Virudhunagar News: திருமணத்துக்கு பெண் மறுப்பு தெரிவித்ததால் அத்தை கொலை செய்யப்பட்டார்.

Advertisement

மகளை காப்பாற்ற எண்ணி குறுக்கே வந்த தாய் வெட்டுக்காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

திருமண ஏற்பாடுகள்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, கல்குறிச்சியில் வசித்து வருபவர் முத்துக்குமார். இவரின் மனைவி விநாயக ஜோதி (வயது 45). தம்பதிகளுக்கு 21 வயதுடைய வர்ஷா என்ற மகள் இருக்கிறார். இதனிடையே, முத்துக்குமாரின் அக்கா மகன் யுவராஜ் (வயது 32) என்பவருக்கும், வர்ஷாவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

இதையும் படிங்க: மூவர் கொலையில் தொடர்புடைய ரௌடி வெட்டிக்கொலை.. பணத்துக்காக செய்த கொலை பாசத்தால் கதை முடிந்த சோகம்.!

பெண் எதிர்ப்பு:

கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக பெரியோர்களால் நிச்சயதார்த்தமும் செய்யப்பட்டது. ஆனால், திருமணத்துக்கு வர்ஷா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக யுவராஜா அவ்வப்போது வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை யுவராஜ் நேரடியாக முத்துக்குமாரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், வர்ஷாவை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

கொலை:

மகளை காப்பாற்ற வந்த விநாயகஜோதியின் மீது பலத்த வெட்டுக்காயம் விழுந்துள்ளது. தொடர்ந்து வர்ஷாவையும் யுவராஜ் வெட்டி இருக்கிறார். பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விநாயக ஜோதி நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும், வர்ஷா படுகாயம் அடைந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு காவல்துறையினர் நேரில் வந்தனர்.

காவல்துறை விசாரணை:

உயிரிழந்த விநாயகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், வர்ஷாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் நிலையத்துக்கு நேரில் வந்து சரணடைந்த யுவராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 
 

 

 

இதையும் படிங்க: சின்னத்திரையை மிஞ்சும் நிஜம்.. தோழியை ஏமாற்றிய திருட்டு டோலி.. அடேங்கப்பா என்ன ஒரு ஸ்கெட்ச்.. சென்னையில் ஷாக்.! பெண்களே உஷார்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Virudhunagar #Murder #அத்தை மகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story