×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூவர் கொலையில் தொடர்புடைய ரௌடி வெட்டிக்கொலை.. பணத்துக்காக செய்த கொலை பாசத்தால் கதை முடிந்த சோகம்.!

Chennai News: சென்னையில் ரௌடி வெட்டிபடுகொலை செய்யப்பட்டார்.

Advertisement

சென்னையை அதிரவைத்த மூவர் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி நடுரோட்டில் கொலை செய்யப்பட்டார். 

உள்ளூர் ரௌடி:

சென்னையில் உள்ள மணலி, புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 28). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த விஜயகுமார் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, நேற்று காலை நேரத்தில் விஜயகுமார், விச்சூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: என் மேல சந்தேகமா? தலைநசுங்கி உயிரிழந்த கணவன்.. மனைவி செய்த வெறித்தன சம்பவம்!

தலையில் வெட்டி கொலை:

அப்போது, எதிர்திசையில் வந்த இளைஞர், திடீரென தான மறைத்து எடுத்து வந்த அரிவாள் கொண்டு விஜயகுமாரின் மார்பில் குத்தி இருக்கிறார். இதனால் நிலைதடுமாறி விழுந்த நபரை, இளைஞர் தலையில் சரமாரியாக வெட்டினார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி திருப்பம்:

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விஜயகுமார், அவரது அண்ணன் அஜித் குமார் (வயது 28) ஆகியோர் ரௌடிகள் என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டில் கண்ணம்பாளையம் உடற்பயிற்சி மையத்தில், கஞ்சா விற்பனை முன்விரோதத்தில் ஒரே நேரத்தில் 3 நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவத்தில் அஜித் குமார், விஜயகுமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள்.

தலைமறைவு வாழ்க்கை:

கொலை வழக்கில் கைதான இருவரும் ஜாமினில் தற்போது வெளியே இருக்கும் நிலையில், ஏற்கனவே கொலையான 3 நபர்களின் நண்பர்கள் பழிக்குப்பழிவாங்க இவர்களை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த விஷயத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்ட இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், அஜித், விஜயின் உறவினர்களும் ஊருக்குள் நீங்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் திருமணம் செய்யாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் வெவ்வேறு இடத்தில் கிடைத்த வேலைகளை செய்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

பழிக்குப்பழி:

விச்சூரில் வரும் சில நாட்களில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், இவர்களின் மூத்த சகோதரர் ஜெய் என்பவரின் மகளுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் ஆகும். இதனால் திருவிழாவுக்கு முன்பே ஊருக்கு வந்து செல்லலாம் என விஜயகுமார் அண்ணன் மகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார். இவர் வந்து சென்றதை ஏற்கனவே கொலையான 3 பேரின் நண்பர்களில் ஒருவரது உறவினர் எதற்ச்சையாக கவனித்துள்ளார். இதனையடுத்து பழிக்கு பழியாக கொலை சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. 

இந்த கொலை சம்பவத்தில் லோகேஷ் (வயது 28) என்பவர் ஈடுபட்டது உறுதியானது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 
 

 

 

இதையும் படிங்க: ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. உறவினரின் உடந்தையால் அரங்கேறிய பெருங்கொடுமை.. பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #rowdy murder #வெட்டிக்கொலை #திருவள்ளூர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story