×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னத்திரையை மிஞ்சும் நிஜம்.. தோழியை ஏமாற்றிய திருட்டு டோலி.. அடேங்கப்பா என்ன ஒரு ஸ்கெட்ச்.. சென்னையில் ஷாக்.! பெண்களே உஷார்.!

Chennai News: பெண்ணிடம் 55 சவரன் நகையை வாங்கி அடகு வைத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

சுபநிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என தோழியின் நகைகளை வாங்கிச் சென்று அடமானம் வைத்த பெண் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. தோழி நல்லவர் என நினைத்து வீட்டின் சுப-துக்கம், நகை-பணம் வரவு குறித்து வெளியே தெரிவித்தால் என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம். சின்னத்திரை தொடர்களைப்போல நடந்த விபரீதத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பாசம்ங்க பாசம்:

Gold Jewel: சென்னையில் உள்ள கொடுங்கையூர், சுகந்தம்பாள் நகரில் வசித்து வருபவர் பிரபாவதி (வயது 43). இவர் தனது மகள், மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இவர்களின் தெருவில் வசித்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணின் மூலம் அவரின் தங்கை தீபா என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின் தீபாவின் அன்பான பேச்சால் பிரபாவதியின் குடும்பத்தில் ஒருவராக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. உறவினரின் உடந்தையால் அரங்கேறிய பெருங்கொடுமை.. பதறவைக்கும் சம்பவம்.!

தோழியின் போலி பாசம்:

இதனிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய தீபா, ப்ரபாவதியின் 55 சவரன் நகைகளை வாங்கிச் சென்றுள்ளார். பின் சில நாட்கள் கடந்தபின் நகைகளை கேட்டபோது, எதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழித்து வந்துள்ளார். இதுதொடர்பாக பிரபாவதி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு பலனில்லை என தெரியவந்த தருணத்தில், குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபாவின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

கைது:

நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நேற்று தீபாவை (வயது 35) கைது செய்தனர். விசாரணையில், ப்ரபாவதியிடம் வாங்கிச் சென்ற நகைகளை அடகு கடையில் வைத்து பணம் வாங்கி செலவழித்து அம்பலமானது. இதனையடுத்து, தீபாவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 

 
 

 

 

இதையும் படிங்க: மூவர் கொலையில் தொடர்புடைய ரௌடி வெட்டிக்கொலை.. பணத்துக்காக செய்த கொலை பாசத்தால் கதை முடிந்த சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #gold #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story