16 வயது மாணவி கர்ப்பம்.. கீழே விழுந்ததில் இறந்த சிசு.. சிக்கலில் காதலன்.! விருதுநகரில் பகீர்.!
Virudhunagar News: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவி கீழே விழுந்து பிரசவம் ஏற்பட்டு சிசு இறந்த நிலையில், காதலன் போக்ஸோவில் சிக்கி இருக்கிறார்.
16 வயது சிறுமி:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இதையும் படிங்க: தாய்க்கு திதிகொடுக்கச் சென்று குடும்பத்தினர்.. காவேரியாற்றில் காத்திருந்த எமன்.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.!
பழக்கம்:
இதனிடையே, மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் சிவகாசியில் உள்ள போஸ் காலனி பகுதியில் வசித்து வரும் விஸ்வமணி (வயது 25) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நட்பாக மாறி, பின் காதலாகியதாக தெரியவருகிறது.
தனிமை:
இந்நிலையில், பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞர், ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார்.
சோகம்:
இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி வழக்கம்போல பள்ளிக்குச்சென்று மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், கர்ப்பம் உறுதியானது. பின் தகவல் அறிந்து குடும்பத்தினரும் நேரில் வந்தனர்.
குறைப்பிரசவம்:
குடும்பத்தினர் அனைவரும் பேசி மாணவியை அவசர அவசரமாக வீட்டுக்கு அழைத்துவந்த நிலையில், அங்கு குறைப்பிரசவம் நடந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் மாணவி & சிசுவை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிசு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
புகார்:
இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவான காதலன் விஸ்வமணிக்கு வலைவீசப்பட்டுள்ளது. அவரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'வேலை கொடுக்குறேன் வாங்க' - பெண் செய்தியாளருக்கே இப்படியா? மனைவியுடன் சேர்ந்து தொழிலதிபர் ஷாக் செயல்.. சென்னையில் திடுக்.!