×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்க்கு திதிகொடுக்கச் சென்று குடும்பத்தினர்.. காவேரியாற்றில் காத்திருந்த எமன்.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.! 

Karur News: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். 

Advertisement

திதி கொடுக்கச் சென்ற இடத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

திதிகொடுக்க.. 

கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் அருணன் (வயது 62). இவரின் சகோதரர் சுரேஷ் (வயது 61). இவர்களின் தாய் தேவகி. இவர் மறைந்துவிட்ட நிலையில், தாய்க்கு திதிகொடுக்க நெரூர் காவேரி ஆற்றுக்கு நேற்று 12 மணிக்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: 'வேலை கொடுக்குறேன் வாங்க' - பெண் செய்தியாளருக்கே இப்படியா? மனைவியுடன் சேர்ந்து தொழிலதிபர் ஷாக் செயல்.. சென்னையில் திடுக்.! 

திதி கொடுத்தனர்: 

இவர்களுடன் ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி மேலாளர் ஸ்ரீனிவாசன் (வயது 64) உட்பட 7 பேர் இருந்துள்ளனர். சடங்கின்போது காவேரி ஆற்றில் இறங்கி திதி கொடுத்துக்கொண்டு இருந்த நிலையில், தண்ணீர் போதுமான அளவு இல்லை என ஆழமான பகுதிக்கு மூவரும் சென்றுள்ளனர். அச்சமயம் மூவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். 

மீட்பு: 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், விரைந்து வந்து இவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவே, அங்கு மூவரின் மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு திதிக்கொடுக்கச் சென்ற மகன்கள், அவர்களின் உறவினர் என மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. நெல்லையில் பயங்கரம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #death #Karur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story