×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. நெல்லையில் பயங்கரம்.! 

Tirunelveli News: பேருந்து நிறுத்தத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Advertisement

மனைவி, குழந்தைகளை வீட்டில் விட்டுவந்த ஒருசில நிமிடங்களில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது. 

தனியார் நிறுவன ஊழியர்: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வி.கே. புரம், டாணா பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவரின் மகன் சொரிமுத்து (வயது 30). இவர் விருதுநகரில் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்.. சகோதரர்கள் வெட்டிக்கொலை.. உறவினர்கள் கொந்தளிப்பு.. பதற்றம்.! காவல்துறை குவிப்பு.! 

ஊருக்கு வந்தார்: 

முத்துவுக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் குடும்பத்துடன் அவர் ஊருக்கு வந்துள்ளார். முத்துவின் மனைவி குழுவில் கடன் பெறவேண்டி இருந்துள்ளது. 

தனியாக இருந்தார்: 

அப்போது, மனைவியை தனது பெற்றோரின் வீட்டில் விட்டுவிட்டு, தான் மட்டும் தனியாக விருதுநகர் செல்ல மாலை சுமார் 4 மணியளவில் வி.கே. புரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென அரிவாள் கொண்டு முத்துவை சரமாரியாக வெட்டி இருக்கிறது. 

மரணம்: 

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த முத்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதனைக்கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 4 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். 

இதையும் படிங்க: ஒன்று கூடி தாக்கிய சகஊழியர்கள்.. தப்பிக்க 4 வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. போராடி பறிபோன உயிர்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #tirunelveli #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story