கடலூரில் பயங்கரம்.. சகோதரர்கள் வெட்டிக்கொலை.. உறவினர்கள் கொந்தளிப்பு.. பதற்றம்.! காவல்துறை குவிப்பு.!
Cuddalore News: சிதம்பரத்தில் இரட்டைக்கொலை நடந்துள்ளது.
சகோதரர்களை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்தம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பால்வார்த்துண்ணான் கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாமலை. இவரின் மகன் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலையின் சகோதரர் ராமச்சந்திரன். இவரின் மகன் ராமகிருஷ்ணன் (வயது 36). இவர் விவசாயி ஆவார்.
இதையும் படிங்க: ஒன்று கூடி தாக்கிய சகஊழியர்கள்.. தப்பிக்க 4 வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்.. போராடி பறிபோன உயிர்.!
கொலை:
ராமகிருஷ்ணன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று இரவில் அதே பகுதியில் நின்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பலி:
தீவிர சிகிச்சை பலனின்றி இருவரும் அங்கு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள், மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு குவிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற உறவினர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரேயொரு மிரட்டல்.. ரௌடிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இளைஞர்.. சென்னை சம்பவத்தில் திடுக் திருப்பம்.!