×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரேயொரு மிரட்டல்.. ரௌடிக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இளைஞர்.. சென்னை சம்பவத்தில் திடுக் திருப்பம்.! 

Chennai News: ரௌடியை கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார். 

Advertisement

தன்னை கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்த ரௌடியை, மற்றொரு இளைஞர் தீர்த்துக்கட்டிய சம்பவம் நடந்துள்ளது.

கொலை: 

Avadi News: சென்னையில் உள்ள ஆவடி, பொத்தூர், மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். சதீஷின் மனைவி மீனா (வயது 35). தம்பதிகளுக்கு 11 மற்றும் 9 ம் வகுப்பு பயின்று வரும் மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே, நேற்று மாலை நேரத்தில் மணிகண்டபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த சதீஷ், மர்ம கும்பலால் கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: டெக்னாலஜியா.. வாட்ஸப்பில் ஹைடெக் விபச்சாரம்.. பலே புரோக்கர் கைது.! 

விசாரணை: 

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே சதீஷ் உயிரிழந்துவிட்ட நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பொத்தூர் பகுதியைச் சேர்ந்த பரத் (வயது 20) என்பவரின் மீது சந்தேகம் எழுந்தது. 

முன்விரோதம்: 

இந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. அதாவது, பரத் - சதீஷ் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று காலை நேரத்தில் இருவரும் மாறி-மாறி தாக்கிக்கொண்ட நிலையில், சதீஷ் தனது வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து பரத்தை வெட்டிக்கொலை செய்துவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். 

ஸ்கெட்ச்: 

இதனால் எப்படியேனும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என நினைத்து பயந்த பரத், சதீஷை கொலை செய்துவிட்டால் நமது உயிர் தப்பிவிடும் என்ற எண்ணத்தில் முந்திக்கொண்டு கத்தியால் வெட்டியது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சதீஷ் உயிரிழந்துவிட்ட காரணத்தால், பரத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த சதீஷ் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: திருமண வீட்டில் கஞ்சா பாடல் கேட்டு அடாவடி.. டிஜே கருவியை அடித்து நொறுக்கிய கும்பல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #rowdy murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story