திருமண வீட்டில் கஞ்சா பாடல் கேட்டு அடாவடி.. டிஜே கருவியை அடித்து நொறுக்கிய கும்பல்.!
Thiruvallur News: கஞ்சா பாடல் இசைக்கததால் டிஜே கருவியை சேதப்படுத்திய இளைஞர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
டிஜே கருவிகளை அடித்து நொறுக்கியதாக 4 பேருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூர், கொசவம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சிறுவானூர், கண்டிகை பகுதியில் இருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!
கொண்டாட்டம்:
இந்த விழாவில் கொசவம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர், டிஜே இசைக்கச்சேரி நடத்தினார். அப்போது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாடலுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தபடி இருந்தனர்.
கஞ்சா பாடல் கேட்டு அடாவடி:
அப்போது, வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணிநாதன் (வயது 23) கஞ்சா பாடல் கேட்டு தகராறு செய்துள்ளனர். திருமண வீட்டில் கஞ்சா பாடல் வேண்டாம் என்று ஸ்ரீராம் மறுக்கவே, ஆத்திரமடைந்த மணிநாதன் தனது கூட்டாளிகள் வெள்ளை ஸ்ரீ உட்பட 5 பேருடன் சேர்ந்து டிஜே கருவிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீராம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மணிநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவான 4 பேருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: +2 மாணவி வன்கொடுமை.. தாயும், மகனும் அரங்கேற்றிய கொடூரம்..!