×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!

Tenkasi News: பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

திருமண ஆசை காண்பித்து 15 வயது மாணவியை வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி மாயம்:

Sankarankovil 15 Year Old Girl Rape: தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த வாரத்தில் சிறுமி திடீரென மாயமானார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!

வீட்டுக்கு வந்த சிறுமி:

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இதனிடையே, வீட்டுக்கு வந்த சிறுமியிடம் பெற்றோர் எங்கு சென்றாய்? என விசாரித்து இருக்கின்றனர். அப்போது, குருவிகுளம் மலையடிப்பட்டி, தெற்குத்தெருவில் வசித்து வரும் கார் ஓட்டுநர் மாரியப்பன் மகன் காளிராஜ் (வயது 22) சிறுமியிடம் பழகி வந்தது தெரியவந்தது.

போக்ஸோவில் கைது:

காளிராஜ் சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக குருவிகுளம் காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தவே, அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #sexual abuse #15 வயது சிறுமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story