16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!
வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
வெயிலுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து உறங்கிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
12ம் வகுப்பு சிறுமி:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, கீழ் மின்னல் கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் ஆற்காடு பகுதியில் செயல்படும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 11ம் தேதி சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இரவில் புழுக்கம் அதிகம் இருந்ததால், கதவை திறந்து வைத்து சிறுமி உறங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மூதாட்டியையும் விட்டுவைக்காத கொடுமை.. 50 வயது நபர் கைது.. பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்..!
பாலியல் தொல்லை:
பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜேஷ் (வயது 43), நள்ளிரவில் உறங்கிக்கொண்டு இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, ராஜேஷ் அங்கிருந்து தப்பி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.
போக்ஸோவில் கைது:
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரத்னகிரி காவல்துறையினர் போக்ஸோவில் ராஜேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. தமிழகத்தில் ஷாக்.!