×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'வேலை கொடுக்குறேன் வாங்க' - பெண் செய்தியாளருக்கே இப்படியா? மனைவியுடன் சேர்ந்து தொழிலதிபர் ஷாக் செயல்.. சென்னையில் திடுக்.! 

பெண் செய்தியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

தொழிலதிபர் பி.ஆர். சுந்தரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள காரணத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. 

தொழிலதிபர்: 

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பி.ஆர். சுந்தர். இவர் தொழிலதிபர் & பங்குச்சந்தை நிபுணர் ஆவார். இவர் மான்சன் கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனம் மூலம் பங்குச்சந்தை தொடர்பான ஆன்லைன், யூடியூப் வகுப்பு எடுத்து வந்துள்ளார். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் செய்கிறார். 

நேர்காணல்: 

இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம், 2021 ம் ஆண்டு ஒரு பெண் செய்தி வாசிப்பாளரை கொண்டு சுந்தரிடம் நேர்காணல் செய்துள்ளது. இந்த நேர்காணலுக்குப்பின் தொழிலதிபர் - பெண் செய்தி வாசிப்பாளர் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் பேரில் பெண்ணும் தொழிலதிபரின் வீட்டுக்குச் சென்று, சுந்தரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நட்பாக பழகி இருக்கிறார். 

வேலை கேட்டார்: 

பின் ஒருகட்டத்தில் தொழிலதிபரிடம் பெண் செய்தி வாசிப்பாளர் வேலை கேட்கவே, நட்பை அதிகரித்த சுந்தர் ஒருநாள் பட்டினப்பாக்கம் அடுக்குமாடி குடியிருக்குபு வரவழைத்து தவறாக நடந்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி தொழிலதிபரின் மனைவி மங்கையற்கரசியிடம் தெரிவிக்கவே, அவர் கண்டுகொள்ளவில்லை. பின் ஜூன் 29 ம் தேதி தொழிலதிபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார். 

நேரில் சென்றார்: 

கயவனின் விபரீத எண்ணம் தெரியாமல் பெண்ணும் சுந்தரின் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், 3 மணிநேரம் அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். சுந்தரின் மனைவியும் இந்த விஷயத்துக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதனால் நிலைமையை உணர்ந்த பெண் செய்தி வாசிப்பாளர், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் பி.ஆர். சுந்தர், அவரின் மனைவி மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பாலியல் தொல்லை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்.. சிதறி ஓடிய மக்கள்.. நெல்லையில் பயங்கரம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #chennai #Sexual Harassment #பி ஆர் சுந்தர் #பெண் செய்தியாளர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story