கவனிக்க ஆட்கள் இல்லை.. பாலுக்காக கதறிய பச்சிளம் பிஞ்சு.. கொன்று புதைத்த தாய்.. திருவண்ணாமலையில் சோகம்.!
Tiruvannamalai News: குழந்தையை கவனிக்க இயலாமல் திணறிய தாய் செய்த காரியம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 15 நாட்கள் ஆன குழந்தையை கொலை செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார்.
தம்பதிகள்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, கண்ணமங்கலம், தூரிஞ்சாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரின் மனைவி லட்சுமி (வயது 30). தம்பதிகளுக்கு 13 வயதுடைய மகன் இருக்கிறார்.
இதையும் படிங்க: 15 வயதில் பிரசவம்.. குழந்தை பிறந்த சில நாட்களில் சிறுமி மரணம்.. காதல் திருமணத்தால் கிருஷ்ணகிரியில் ஷாக்.!
பிரிவு:
இதனிடையே, இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக லட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்தார். பின் படவேடு, ராமநாதபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் (வயது 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
சேர்ந்து வாழ்கிறார்கள்:
இவர்கள் இருவரும் ஒருகட்டத்தில் சேர்ந்து வாழத்தொடங்கிய நிலையில், தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். மதிவாணன் தற்போது வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, மீண்டும் கர்ப்பிணியான லட்சுமிக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
ஆட்கள் இல்லை:
குழந்தைப்பேறுக்குப்பின் கணவரும் வெளியூரில் வேலை பார்க்க, லட்சுமியை கவனிக்கவும் ஆட்கள் இல்லை. இதனால் குழந்தைகளை கவனிக்க இயலாமல் தவித்துள்ளார். மேலும், பிறந்த பிஞ்சுக்கு பால் கொடுக்க முடியாமலும் இருந்துள்ளார். இதனால் குழந்தை பசியில் அழுதுகொண்டே இருந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாதபோது குழந்தையை கழுத்தை நெரித்துக்கொலை செய்து, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.500 பணம் கொடுத்து கமண்டல நாகநதியில் குழிதோண்டி புதைக்க சொல்லி இருக்கிறார்.
விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த படவேடு விஏஓ ஜோதிமுருகன் சந்தவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த லட்சுமி வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!