15 வயதில் பிரசவம்.. குழந்தை பிறந்த சில நாட்களில் சிறுமி மரணம்.. காதல் திருமணத்தால் கிருஷ்ணகிரியில் ஷாக்.!
Krishnagiri News: குழந்தையை பெற்றெடுத்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிக்குச் செல்லும் வயதில் காதல் வயப்பட்ட சிறுமி, 15 வயதில் குழந்தையை பெற்றெடுத்து உடல்நலம் குன்றி மரணித்த சோகம் நடந்துள்ளது.
காதல்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, கோட்டையூர் கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் மாதப்பன். இவர் கூலித் தொழிலாளி ஆவார். மாதப்பனின் மகள் லட்சுமி (வயது 15). இதே கிராமத்தில் வசித்து வருபவர் மாத்துரப்பா. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
திருமணம்:
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில், சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த மே 29ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
உடல்நிலை கவலைக்கிடம்:
இதனால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்துக்குப்பின் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாகி இருக்கிறது. இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
பரிதாப பலி:
தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 03ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் தாய் கெஞ்சம்மா தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மத்துரப்பாவை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியின் கையை கடித்துக்குதறிய இளைஞன்.. சாலையில் அரங்கேறிய வெறிச்செயல்.!