×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

Theni News: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

நிதிநிறுவனத்தை நடத்தி வந்த பாஜக பிரமுகர், கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வட்டித் தொழில்:

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், ஒத்தவீடு பகுதியில் வசித்து வருபவர் சிங்கராஜ் (வயது 44). இவர் சின்னமனூர் நகர பாஜக தலைவராக இருந்து வருகிறார். இதே பகுதியில் நிதிநிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். உள்ளூரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார். 

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

நிபந்தனை:

இதனிடையே, சின்னமனூர் அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளம்பெனொருவர், தனது தோழியுடன் கடந்த வாரத்தில் சிங்கராஜை நேரில் சென்று சந்தித்துள்ளார். அங்கு ரூ.50 ஆயிரம் கடன் கேட்டு இருக்கிறார். சிங்கராஜ் பெண்ணையும், அவரது தோழியையும் அமரவைத்து கடன் குறித்து நிபந்தனை கூறி இருக்கிறார். 

அத்துமீற முயற்சி:

அந்த சமயத்தில், பெண்ணின் தோழிக்கு தெரிந்த வேறொரு பெண் வரவே, அவர் வெளியே சென்று அவரிடம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இந்த தனிமனியான சூழலை தனக்கு சாதகமாக்க நினைத்த சிங்கராஜ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ந்துபோன இளம்பெண் சிங்கராஜை தள்ளிவிட்டு வெளியே வந்துள்ளார். 

தற்கொலை முயற்சி:

பின் தோழியுடன் அவர் ஊருக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், சிங்கராஜின் செயலை எண்ணி மனஉளைச்சலில் இருந்துள்ளார். பின் ஒருகட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கவே, அவரை மீட்ட குடும்பத்தினர் தேனி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின் இதுதொடர்பாக மே 05ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

காவல்துறை விசாரணை:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாஜக நிர்வாகி சிங்கராஜை கைது செய்தனர். மேலும், சிங்கராஜ் சின்னமனூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். அந்த பெண் வட்டியுடன் அசலை செலுத்தியும் கூடுதல் வட்டி கேட்டு பெண்ணின் வீட்டுக்குச் சென்று ஆபாசமாக பேசி மிரட்டி இருக்கிறார்.

பதவிபறிப்பு:

இந்த சம்பவம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கராஜின் செயல் குறித்து அறிந்த தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன், சிங்கராஜை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகி கைது.. சென்னையில் ஷாக்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Theni #Crime #Sexual Harassment #பாஜக பிரமுகர் கைது
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story