×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை.. தாய் & கள்ளக்காதலன் கைது..!

Perambalur News: 9 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாயின் கள்ளக்காதலன் கைதாகி இருக்கிறார்.

கருத்து வேறுபாடு:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 37). இவரின் மனைவி நிஷாந்தி (வயது 26). தம்பதிகளின் மகள் கீர்த்திஷா (வயது 9). தம்பதிகளுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நிஷாந்தினி சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

குழந்தை இடையூறு?

இதனிடையே, பெரம்பலூரில் செயல்படும் கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்திக்கு, மணிவண்ணன் (வயது 36) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்யவும் முடிவெடுத்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் உறவுக்கும், திருமண வாழ்க்கைக்கும் குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்துள்ளனர்.

கள்ளக்காதலன் கைது:

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாடாலூர் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நிஷாந்தியின் கணவர் குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் நிஷாந்தியை கைது செய்த நிலையில், கள்ளக்காதலன் சோலைமுத்து என்பவரின் மகன் மணிவண்ணனை (வயது 36) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Perambalur #illegal affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story