×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

Perambalur Illegal Affair News: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

பாடலூரில் மகளை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து வேறுபாடு:

Mother Killed Daughter: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 37). இவரின் மனைவி நிஷாந்தி (வயது 26). தம்பதிகளுக்கு 9 வயதுடைய கீர்த்திஷா என்ற மகள் இருக்கிறார். இதனிடையே, தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். 

இதையும் படிங்க: மது, கஞ்சா போதைக்கு அடிமை.. தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திவிட்ட பேரன்.. குலைநடுங்கவைக்கும் சம்பவம்.!

கள்ளக்காதல்:

நிஷாந்தினி காரை சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். பெரம்பலூர் கட்டுமான சங்க அலுவலகத்தில் வேலையும் பார்த்து வருகிறார். அப்போது, நிஷாந்திக்கு மணிகண்டன் (வயது 30) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

கழுத்தை நெரித்துக்கொலை:

இவர்களின் கள்ளக்காதல் உறவுக்கு சிறுமி கீர்த்திஷா தடையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், நிஷாந்தி மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்தது தெரியவந்தது. பின் மகள் சாப்பிட்டு உறங்கிய நிலையில், பேச்சு மூச்சின்றி இருப்பதாக மருத்துவரிடம் தெரிவித்து இருக்கிறார். மருத்துவர்கள் சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட அடையாளங்களை கண்ட நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நேரில் வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கொலை சம்பவம் அம்பலமானது. சிறுமியின் தாய்மாமா லோகநாதன் கொடுத்த புகாரில் நிஷாந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Perambalur #Daughter Killed #உல்லாசம் #கள்ளக்காதல் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story