×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது, கஞ்சா போதைக்கு அடிமை.. தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திவிட்ட பேரன்.. குலைநடுங்கவைக்கும் சம்பவம்.!

Thiruvarur News: தாத்தா-பாட்டியை கொடூர கொலை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

டீசல் ஊற்றி வயோதிக ஜோடி எரித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரி:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, காரக்கோட்டை, புதுத்தெருவில் வசித்து வருபவர் பிச்சைமுத்து (வயது 72). இவரின் மனைவி சந்திரா (வயது 66). தம்பதிகளின் மகன் கலியபெருமாள் (வயது 55). இவரின் மனைவி தேவி (வயது 50). தம்பதிகளுக்கு 30 வயதுடைய ஐயப்பன் என்ற மகன் இருக்கிறார். படித்து பொறியியல் பட்டம் பெற்றுள்ள ஐயப்பன், மது-கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கிறார்.

இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!

சிகிச்சை தொடர்ந்தாலும் பழக்கம் மாறவில்லை:

இதனால் திருச்சி, புதுச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று இருக்கிறார். சிகிச்சைகள் தொடர்ந்தாலும் போதைப்பழக்கம் நிறுத்தப்படவில்லை. இதனிடையே, தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கலியபெருமாள் மனைவி தேவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

செலவுக்கு பணம் வாங்கி வந்தார்:

இந்திரா நகரில் இருக்கும் தாய் தேவியுடன் மகன் ஐயப்பன் வசிக்கிறார். பல ஆண்டுகளாக மலேஷியாவில் கலியபெருமாள் வேலை பார்த்து வந்த நிலையில், தந்தையிடம் ஐயப்பன் பேசி வந்துள்ளார். மேலும், தனது செலவுக்கு தேவைப்படும்போது தந்தையிடம் பணம் வாங்கி வந்திருக்கிறார். மகன் போதைக்கு அடிமையாகும் காரணத்தால் கலியபெருமாள் ஒருகட்டத்தில் பணம் அனுப்புவதை நிறுத்தி இருக்கிறார்.

தொடர்ந்த தகராறு:

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஐயப்பன் தனது தாத்தா-பாட்டியான பிச்சைமுத்து-சந்திரா வீட்டுக்குச் சென்று அப்பா பணம் அனுப்புவதில்லை, அம்மாவையும் பிரிந்து இருக்கிறார், போனில் தொடர்புகொண்டாலும் எடுக்கவில்லை என தகராறு செய்துள்ளார். அவ்வப்போது இந்த தகராறு நடந்த நிலையில், நேற்று வயோதிக தம்பதி வீட்டில் இருந்துள்ளனர்.

காவல்துறை விசாரணை:

அச்சமயம் மது, கஞ்சா போதையில் வந்த ஐயப்பன் தனது தாத்தா-பாட்டியை அரிவாள் கொண்டு வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவரின் உடலையும் டீசல் வாங்கி வந்து தீவைத்து இருக்கிறார். பின் நடந்த சம்பவம் குறித்து தாயிடம் ஐயப்பன் தெரிவிக்கவே, அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் உயிரிழந்த தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Thiruvarur Murder #தாத்தா பாட்டி கொலை #மது கஞ்சா பழக்கம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story