கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!
Karur News: 40 வயது பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சோகம் கரூர் குளித்தலையில் நடந்துள்ளது.
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, தெற்கு மேலப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 40). தம்பதிகளுக்கு 23 வயதுடைய விகாஸ் என்ற மகன் இருக்கிறார். சுரேஷ் திருச்சியில் பழக்கடை விற்பனையாளராக வேலை பார்க்கிறார்.
வெளியே வரவில்லை:
விகாஸ் பெங்களூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம் எனக்கு கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த சிவரஞ்சனி, சம்பவத்தன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!
கரும்புக்காட்டுக்குள் சடலம்:
இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் இல்லை. பின் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது, வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் கரும்புக்காட்டில் சிவரஞ்சனி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்ததை கண்டுள்ளனர்.
காரணம் என்ன?
இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் சிவரஞ்சினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிவரஞ்சனி அணிந்திருந்த தோடு, செயின், நகைகள் போன்றவை மாயமாகவில்லை என்பது தெரிய வந்ததால், வேறு எந்த காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டாraa? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!