×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

Krishnagiri News: விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Advertisement

தனது நிலத்தில் வேலை செய்யச் சென்ற விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் போச்சம்பள்ளியில் நடந்துள்ளது.

விவசாயம் & ரியல் எஸ்டேட் தொழில்:

Krishnagiri Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஜம்புக்குடப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியசீலன் (வயது 50). விவசாயி ஆவார், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் மனைவி முருகம்மாள் (வயது 38). சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு கோமதி என்ற மகளும், மணிகண்டன் (வயது 17) என்ற மகனும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

வீட்டுக்கு வரவில்லை:

கோமதிக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவர் கணவருடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் சத்தியசீலன், பணிகளை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். இதனிடையே, நேற்று முன்தினம் காலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை.

கொடூர கொலை:

இதனால் உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடியலைந்த நிலையில், நேற்று காலை சாத்தியசீலனுக்கு சொந்தமான வேறொரு நிலத்தில் அவர் ரத்த காயத்துடன் கொலை செய்யப்பட்ட சடலமாக இருந்தவாறு உடல் தென்பட்டது. பின் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசுத்தனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Krishnagiri #கிருஷ்ணகிரி கொலை #ரியல் எஸ்டேட் அதிபர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story