கஞ்சா போதிய கும்பலால் கொடூரம்.. 2 குழந்தைகளின் தந்தை கல்லால் தாக்கி துள்ளத்துடிக்க கொலை.!
Tiruvannamalai News: முன்விரோதத்தில் வெல்டிங் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கஞ்சா கும்பல் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வெல்டிங் தொழிலாளி:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி வீதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (வயது 26). இவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். ரஞ்சித்துக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: Madurai News: அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை.. டீக்கடை வாசலில் பயங்கரம்.!
முன்விரோதம்:
இதனிடையே, சம்பவத்தன்று பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோகன் என்பவருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, கஞ்சா போதையில் இருந்த மோகன் ரஞ்சித்தை தாக்கி இருக்கின்றனர்.
கொலை & மரணம்:
தலை, முகம், உடலில் கொடூர தாக்குதல் நடந்த நிலையில், படுகாயமடைந்த ரஞ்சித் திருவண்ணாமலையில் சிகிச்சை பெற்றபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கைது & வலைவீச்சு:
இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர், மோகன் உட்பட 2 பேரை கைது செய்தனர். எஞ்சியோருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்.. அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? சேலத்தில் கொடூரம்..!