×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவசாயியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள்.. அரங்கேறிய பயங்கரத்துக்கு காரணம் என்ன? சேலத்தில் கொடூரம்..!

Salem News: நிலம் தொடர்பான தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

விவசாயியை வெட்டிக்கொலை செய்ததாக சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

முன்விரோதம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தலைச்சோலை கிராமம், பாசிப்பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 37). இவர் விவசாய கூலித் தொழிலாளி ஆவார். இவரின் சகோதரர் செல்வகுமார் (வயது 40). இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக நிலத்தகராறு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: நிலத்தகராறில் நடந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பலியான விவசாயி.. நாமக்கல்லில் ஷாக்.!

சரமாரி வெட்டு:

இதனிடையே, கடந்த ஜூன் 15ம் தேதியன்று இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, செல்வகுமார், அவரின் மகன்கள் அமர்நாத் (வயது 26), தினேஷ் குமார் (வயது 23) ஆகியோர் முருகனை சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கின்றனர்.

சகோதரர்கள் கைது:

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முருகன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தினேஷ்குமார், அமர்நாத் ஆகியோரை கைது செய்தனர். செல்வகுமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதை தகராறால் துள்ளத்துடிக்க பலியான இளைஞர்.. நண்பர்கள் அரங்கேற்றிய வெறிச்செயலால் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #விவசாயி #சேலம் #கொலை #நிலத்தகராறு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story