×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிலத்தகராறில் நடந்த கொடூரம்.. துள்ளத்துடிக்க பலியான விவசாயி.. நாமக்கல்லில் ஷாக்.!

Namakkal News: நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட கொடூரம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

Advertisement

விவசாயியை கொலை செய்ததாக பெண் காவலரின் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்குள் நிலப்பிரச்சனை:

Namakkal Crime: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொளசி, இறையமங்கலம், காட்டுவேலாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 65). இதே பகுதியில் வசித்து வருபவர் வேலுசாமி. இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்.. கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூர செயல்.! பதறவைக்கும் காட்சிகள்.!

வாக்குவாதம்:

இந்த விஷயம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீதர் காலையில் தோட்டத்துக்கு நீர்பாய்ச்ச கிணறு மோட்டரை இயக்கி இருக்கிறார். அப்போது, இருதரப்புக்கும் பொதுப்பாதையில் சென்றுள்ளார். அச்சமயம் அங்கு வேலுசாமி, அவரின் மனைவி கண்ணகி, மகன் கேசவராஜ் இருந்துள்ளனர். 

சரமாரி வெட்டு:

அவர்கள் ஸ்ரீதரிடம் நிலப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்ப, ஸ்ரீதரும் பதில் சொல்லியுள்ளார். இந்த சம்பவத்தின்போது இருதரப்பு தகராறு ஏற்பட்டுள்ளது. கேசவராஜ் ஆத்திரத்தில் கையில் இருந்த அரிவாளால் ஸ்ரீதரை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த ஸ்ரீதரை அக்கம் பக்கத்தினர் வந்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் அனுமதி செய்தனர்.

பெண் தலைமை காவலரின் கணவர்:

பின் எல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வேலுசாமி, அவரின் மனைவி கண்ணகி, மகன் கேசவராஜ் ஆகியோரை தேடினர். இவர்கள் தலைமறைவாகி இருந்தனர். கேசவராஜின் மனைவி மீனா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எட்டாக பணியாற்றி வருகிறார்.

இந்த குற்றச்சம்பவம் நடந்தபோது மீனா காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். இதனிடையே, தலைமறைவான நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: மனைவியின் தலையை துண்டித்து நடுவாசலில் வைத்த கணவன்.. நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #Murder #Crime #விவசாயி கொடூர கொலை #நிலப்பிரச்சனை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story