×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளின் வீட்டிற்கு சென்ற தாய் கண்ட அதிர்ச்சி! அக்கம் பக்கத்தினர் சொன்ன பகீர் உண்மை... கல்குவாரியில் கிடைத்த மனித மண்டை ஓடு, எலும்பு துண்டுகள்! திடுக்கிடும் பின்னணி...!!!

நெல்லை அருகே மாயமான அமராவதி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவர் மகாராஜன் கைது செய்யப்பட்டு, கல்குவாரியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டன.

Advertisement

நெல்லை மாவட்டம் கொண்டாநகரத்தைச் சேர்ந்த அமராவதி, கடந்த ஓராண்டாக காணாமல் போன நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கணவர் மகாராஜன் மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்கைகொண்டான் சிப்காட் அருகேயுள்ள கல்குவாரியில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டாவது திருமணத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறு

மகாராஜனும், கடலூர் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு மகாராஜன் தனது 23 வயது அத்தை மகளான அகிலாவை இரண்டாவது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அமராவதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் மனைவி ஓடி போனதாக கணவன் நம்பவைத்த நாடகம்! 2-வது மனைவியுடன் ஜாலியாக வாழ்ந்த வாழ்க்கை..! கொழுந்தியாவுக்கு வந்த அந்த ஒரு சந்தேகத்தால்... விசாரணையில் தெரிந்த அடுக்கடுக்கான உண்மைகள்..!!!

மகளைக் காண வந்த பெற்றோருக்கு கிடைத்த அதிர்ச்சி

அமராவதியை பார்க்க அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பே அந்த வீட்டை காலி செய்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், மகாராஜனை தொடர்புகொண்டு மகள் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அமராவதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

மருமகனின் பதிலில் சந்தேகம் அடைந்த அமராவதியின் தாய், உடனடியாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கல்குவாரியில் இருந்து எலும்புகள் மீட்பு

விசாரணையின் ஒரு பகுதியாக மகாராஜனின் செல்போன் சிக்னல் மற்றும் அழைப்பு விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அவரது இருப்பிடத்தை கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த ஆண்டு மே மாதம் அமராவதியை கங்கைகொண்டான் சிப்காட் அருகே உள்ள பாப்பாங்குளம் விலக்கு பகுதியில் அமைந்துள்ள கல்குவாரிக்கு அழைத்துச் சென்றதாக மகாராஜன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அங்கு அமராவதியை கல்குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் நடத்தினர். அப்போது பள்ளத்தில் இருந்து ஒரு சேலை, மனித மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருட்கள் தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஓராண்டாக மர்மமாக இருந்த அமராவதியின் மாயம், பெற்றோர் அளித்த புகாரின் மூலம் தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மாணவர்களே மகிழ்ச்சி செய்தி..! ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலடன் உள்ள நவீன கலர்ஃபுல் சைக்கிள்கள் ரெடி...! வெளியானது சூப்பர் அப்டேட்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அமராவதி கொலை #Tirunelveli Crime #மகாராஜன் கைது #கல்குவாரி கொலை #Amaravathi Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story