×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவர்களே மகிழ்ச்சி செய்தி..! ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலடன் உள்ள நவீன கலர்ஃபுல் சைக்கிள்கள் ரெடி...! வெளியானது சூப்பர் அப்டேட்..!!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள்கள், ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சைக்கிள் நிறங்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன சைக்கிள்கள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் இதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், சைக்கிள்களின் நிறம் உள்ளிட்ட சில அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தனித்தனி நிறங்களில் சைக்கிள்கள்

புதிய மாற்றத்தின்படி, மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்திலும், மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும் நவீன சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சைக்கிள்கள் தயாரிக்கப்படுவதுடன், அதனுடன் ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: இந்த ஒரு மனுசுல தாங்க... எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சுட்டாரு...! முதலமைச்சர் விஜய் செய்த அந்த ஒரு செயல்... வேற லெவல் வீடியோ!!!

சைக்கிள் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள்

சைக்கிள்களின் தரத்தில் எந்தவித குறைபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக, அவற்றை துல்லியமாக ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சைக்கிள்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக அவற்றின் தரம் மற்றும் தேவையான அம்சங்கள் சரியாக உள்ளதா என்பது ஆய்வு செய்யப்படும்.

டெண்டர் இறுதிக்கட்டத்தில் மாற்றங்கள்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் கோரப்பட்ட டெண்டர் நிறைவடையும் தருவாயில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, குறிப்பிட்ட நிறங்களில் சைக்கிள்களை தயாரித்து வழங்கும் வகையில் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்த 7 பிளஸ்-2 மாணவர்கள்.. சரமாரி தாக்குதல்..  திருப்பூரில் பரபரப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மாணவர்கள் சைக்கிள் #school students #பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை #Modern Bicycle #சைக்கிள் டெண்டர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story