சற்று முன்.... மாதந்தோறும் ரூ.1,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! மிஸ் பண்ணிட்டாதீங்க...!!!
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்திற்கு ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர வேலைவாய்ப்பு உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகின்றன. தகுதியுடைய பதிவுதாரர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
யாருக்கு உதவித்தொகை கிடைக்கும்?
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதிவு புதுப்பித்தும் இதுவரை வேலைவாய்ப்பு பெறாதவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை என்ன?
திட்டத்தில் பயனடைய விரும்புவோர் tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
ஜூலை 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த அறிவிப்புகள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வரும் நிலையில், தகுதியுள்ளவர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன்... ஹாப்பி நியூஷ்! அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு விட்ட முதல்வர் விஜய்!