×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

BREAKING: சற்றுமுன்... ஹாப்பி நியூஷ்! அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு விட்ட முதல்வர் விஜய்!

தமிழக மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களையும் ஆகஸ்ட் 31-க்குள் முடிக்க கருவூலத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து முடிக்க கருவூலத்துறை நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து நிலுவை பணிகளும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் என மாவட்டக் கருவூல அலுவலர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கருவூலத்துறையின் அவசர உத்தரவு

கருவூலத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான அனைத்து நிலுவை விண்ணப்பங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காலக்கெடு எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!

வேகமெடுத்துள்ள நிலுவைப் பணிகள்

அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து பரிசீலித்து, விண்ணப்பங்களை முடிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் பல மாதங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி

மருத்துவச் செலவுகளை மேற்கொண்ட பிறகும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்பட வேண்டிய தொகை கிடைக்காமல் காத்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த நடவடிக்கையால் நேரடி பலன் பெற உள்ளனர். நிலுவை கோரிக்கைகள் விரைவாக முடிவுக்கு வந்தால், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நிதி நிவாரணம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: 24 நாட்களுக்குள் நடக்கபோகும் நல்லது... தமிழக மக்களுக்கு CM விஜய்யின் ஹாப்பி நியூஷ்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Nadu Medical Insurance #மருத்துவ காப்பீட்டுத் திட்டம் #Treasury Department #அரசு ஊழியர்கள் #Pending Claims
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story