×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

24 நாட்களுக்குள் நடக்கபோகும் நல்லது... தமிழக மக்களுக்கு CM விஜய்யின் ஹாப்பி நியூஷ்!!!

தமிழகத்தில் வீடு மற்றும் வணிகக் கட்டிட அனுமதிகளுக்கு புதிய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 24 நாட்களுக்குள் ஆன்லைனில் அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வீடு கட்டும் கனவை நனவாக்க முயலும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டிட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அலுவலக அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வீடு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான அனுமதிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

‘முதலில் வருவோருக்கு முதலில்’ அடிப்படையில் பரிசீலனை

ஆன்லைன் மூலம் பெறப்படும் அனைத்து கட்டிட அனுமதி விண்ணப்பங்களும் ‘முதலில் வருவோருக்கு முதலில்’ என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் கட்டுமானம் மேற்கொள்ளப்பட உள்ள இடத்தில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.....பறக்கும் படைகள்! தமிழக தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!!

இதனால் விண்ணப்பங்களை நீண்ட காலம் நிலுவையில் வைக்கும் நடைமுறைக்கு கட்டுப்பாடு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

24 நாட்களுக்குள் அனுமதி வழங்க காலக்கெடு

புதிய விதிமுறையின்படி, அனைத்து வகையான திட்ட மற்றும் கட்டிட அனுமதிகள் விண்ணப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 24 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். மேலும், அனுமதி வழங்கும் முழு செயல்முறையும் ஆன்லைன் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களிடம் அச்சிடப்பட்ட ஆவணங்கள் அல்லது கூடுதல் நகல்கள் கோரக்கூடாது என்றும், தேவையான அனைத்து தகவல்களும் டிஜிட்டல் வடிவிலேயே பெறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம்

இந்த புதிய நடைமுறையை உயர் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க உள்ளனர். அனுமதி செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறி விண்ணப்பதாரர்கள் அல்லது பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை தொடர்புகொண்டு அனுமதி பெற முயன்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முழுமையான டிஜிட்டல் நடைமுறை அமலுக்கு வந்தால், இடைத்தரகர்களின் தலையீடு குறைவதுடன் பொதுமக்களின் நேரமும் செலவும் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.... அனைத்து பள்ளிகளின் பள்ளிக்கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Building Approval #தமிழக அரசு #Online Approval #வீடு கட்ட அனுமதி #Local Body
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story