இதுக்கெல்லாம் பயப்புட மாட்டோம்.... அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! உதயநிதி கைதால் கொதிக்கும் தமிழகம்….!!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் ஆற்றிய உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை தொடரும் வகையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் அவசர ஆலோசனை
போராட்டங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உயர்நிலைக் காவல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கவும், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 8 மாதமாக டார்ச்சல்... வேலையை முடித்துவிட்டு இரவில் தனியாக வந்த இளம்பெண்! திடீரென வாலிபர் செய்த வெறிச்செயல்...! பகீர் சம்பவம்.!!!
சென்னையில் பலத்த பாதுகாப்பு
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயம், தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய அதிரடிப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், சாலை மறியல் மற்றும் உருவப்பொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட முயன்ற பல திமுக நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வேகத்தை பாருங்க... CM விஜய்க்கு மலர் கூடை கொடுத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய மோப்ப நாய்..! வியக்க வைக்கும் வீடியோ!!!