8 மாதமாக டார்ச்சல்... வேலையை முடித்துவிட்டு இரவில் தனியாக வந்த இளம்பெண்! திடீரென வாலிபர் செய்த வெறிச்செயல்...! பகீர் சம்பவம்.!!!
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய வற்புறுத்தி பாலியல் தொல்லை அளித்ததாக புகார். தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்திய இளைஞர், வழிமறித்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
8 மாதங்களாக தொடர்ந்த தொந்தரவு
தகவலின்படி, குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், கணவரைப் பிரிந்து தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். குடும்பச் செலவுக்காக அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கீழக்கல்லாம்பாறையைச் சேர்ந்த வைகுண்டம் (28) என்பவர், கடந்த 8 மாதங்களாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. உதவி தலைமை ஆசிரியர் அதிரடி கைது.!
வழிமறித்து பாலியல் தொல்லை
சில தினங்களுக்கு முன்பு இரவு நேர வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணை வழிமறித்த வைகுண்டம், அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக குரும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தலைமறைவான இளைஞருக்கு வலைவீச்சு
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள வைகுண்டத்தை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபாசமாக படமெடுத்து ஆட்கள் விட்டு மிரட்டும் தவெக நிர்வாகி.. "CM சார் பதில் சொல்லணும்" பெண் கண்ணீர் குமுறல்.!