ஆபாசமாக படமெடுத்து ஆட்கள் விட்டு மிரட்டும் தவெக நிர்வாகி.. "CM சார் பதில் சொல்லணும்" பெண் கண்ணீர் குமுறல்.!
பதவி தருவதாக பேசிய மாவட்ட செயலாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தவெக மாவட்ட செயலாளரை கைது செய்ய வேண்டும் என பெண் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
புகார்:
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்மணி, கடந்த ஜூலை 23 ம் தேதி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகம், எஸ்.பி அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
பாலியல் தொல்லை:
இதுகுறித்த புகார் மனுவில், தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜயமோகன், தனக்கு கட்சியில் பதவி வழங்குகிறேன் என கூறி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், தன்னை ஆபாச வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முறையீடு:
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களை தற்போது வரை கைது செய்யாமல் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்மணி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தாஹிராவை எம்.எல்.ஏ அலுவலகத்திலும் நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறார்.
தற்போது இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், பெண்ணுக்கு நீதிவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வலியுறுத்தல்:
இதையும் படிங்க: Zero tolerance-ஆ? Zero Control-ஆ? தவெக அரசுக்கு எதிராக கடுமையாக கொந்தளித்த நயினார்.!