×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படிக்கட்டு பயணத்தால் விபரீதம்.. மாணவர்களின் பெற்றோர்களே உஷார்.. பேருந்தில் இருந்து கீழே விழுந்து சோகம்.! 

Chengalpattu News: பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Advertisement

அதிக கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஒன்பதாம் வகுப்பு: 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், குன்னப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சுதாகர். இவரின் மகன் தீனா (வயது 13). இவர் மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: அடுத்தடுத்து பரவும் டெங்கு.. பீதியில் மக்கள்.. சிறார்களை கவனமாக பார்த்துக்கோங்க மக்களே.! 

பள்ளிக்கு புறப்பட்டார்: 

நேற்று வழக்கம்போல காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்ல, காரனை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தார். அவ்வழியாக வந்த அரசுப்பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார். 

விபத்து: 

பேருந்து வடகடம்பாடி பகுதியில் சென்றபோது மாணவர் தீனா நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவரின் கால்கள் மீது பேருந்தின் பின்பக்க டயர்கள் ஏறி-இறங்கின. உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து, பின் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்வதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தால் அவருடன் பயின்று வரும் மாணவர்களும் சோகம் அடைந்தனர். மேலும், பள்ளி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் கூட்டநெரிசல் ஏற்படுவதாகவும், இதனால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: உயிரைப்பறித்த ஒருதலைக்காதல்.. இளம்பெண்ணின் முடிவால் கண்ணீரில் பெற்றோர்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chengalpattu #accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story