உயிரைப்பறித்த ஒருதலைக்காதல்.. இளம்பெண்ணின் முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!
Chengalpattu News: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காதல் விவகாரத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு பெற்றோர், உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதி:
கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ரமேஷ். இவரின் மனைவி ரோஸ். தம்பதிகளுக்கு ரேவதி (வயது 23) என்ற மகள், 20 வயதுடைய மகள், ஒரு மகன் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம், அம்மனம்பாக்கம் பகுதிக்கு வந்து குடியேறி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை.. திருப்பூரில் வீடுபுகுந்து பயங்கரம்.!
ஓட்டல் வேலை:
அங்கு சொந்தமாக வீடு கட்டிய தம்பதி தற்போது வசித்து வருகிறார்கள். ரமேஷ் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, அம்மனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் ரேவதிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ரேவதி காதலை ஏற்க மறுத்தாலும், இளைஞர் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளார்.
தற்கொலை:
ஒருதலைக்காதலை ரேவதி ஏற்க மறுத்த காரணத்தால், இளைஞர் ஒருகட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் ஆகிறது. இதனிடையே, வாலிபரின் தற்கொலைக்கு தானே காரணம் என தன்னைத்தானே வருத்திக்கொண்டு ரேவதி இருந்துள்ளார்.
மனஅழுத்தம்:
மகளின் நிலைமையை உணர்ந்த பெற்றோர், சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் அனுமந்தபுத்தேரி பகுதியில் குடியேறி இருக்கின்றனர். அங்கு சென்றும் ரேவதி மனம் மாறாத நிலையில், மகளை ஒரு மாறுதலுக்காக பெற்றோர் வேலைக்கும் அனுப்பி இருக்கின்றனர். இதனிடையே, நேற்று காலை நேரத்தில் தம்பதிகள் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட, மகளுக்கு வேலைக்குச் செல்ல உணவும் வைத்துள்ளனர்.
விபரீதம்:
ஆனால், வேலைக்கு புறப்படாமல் வீட்டிலேயே இருந்த ரேவதி, மனஉளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை நேரத்தில் வேலை முடிந்து வந்த ரேவதியின் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்ட நிகழ்வைக்கண்டு கதறி இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், செங்கல்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆடி மாதத்தில் ஊருக்குச் சென்ற மனைவி.. பக்கத்து வீட்டுப்பெண் மீது ஆசைப்பட்ட கணவர்.. அடுத்து நடந்த பயங்கர சமபவம்.!