×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடி மாதத்தில் ஊருக்குச் சென்ற மனைவி.. பக்கத்து வீட்டுப்பெண் மீது ஆசைப்பட்ட கணவர்.. அடுத்து நடந்த பயங்கர சமபவம்.! 

திருமணமான இளைஞரின் விபரீத ஆசையால் வம்பில் சிக்கிக்கொண்டார். 

Advertisement

பெற்றோர் வீட்டுக்கு மனைவி சென்றதும், விபரீத எண்ணம் கொண்ட இளைஞர் வம்பில் சிக்கிக்கொண்ட பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு. நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, சிக்கலில் மாட்டிய கணவனை மீட்டெடுத்த மனைவியின் அன்பு கவனிக்கப்பட்டுள்ளது. 

ஆசை: 

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சுதர்சன். இவரின் மனைவி ஆடி மாதத்தில் பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், சுதர்சன் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நமீதா என்ற இளம்பெண்ணுடன் பேசத்தொடங்கி இருக்கிறார். ஒருகட்டத்தில் நமீதாவை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர், நான் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று காதல் வலைவீசி இருக்கிறார். 

இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 'ஜனநாயகன்' கொடுத்த விழிப்புணர்வு.. சிக்கிய குற்றவாளி.! 

எல்லைமீறியது: 

நமீதா பதில் எதுவும் தெரிவிக்காத நிலையில், சுதர்சன் பேசி அனுப்பும் மெஸெஞ்சகளை நமீதா பதிவு செய்து வைத்துள்ளார். நாளுக்கு நாள் சுதர்சனின் செயல்பாடுகள் எல்லைமீறி செல்லவே, ஆண் நண்பர் ஒருவரை சந்தித்த நமீதா, சுதர்சனின் ஆடியோ பதிவுகளை போட்டுக்காண்பித்து இருக்கிறார். பின் இவர்கள் இருவரும் சுதர்சனை சந்தித்து தட்டிக்கேட்ட நிலையில், காலில் விழுந்து சுதர்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

பணம் பறிக்க திட்டம்: 

சுதர்சனின் நிலையை புரிந்துகொண்ட இருவரும், அவரிடம் இருந்து பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக தோழிகளான வழக்கறிஞர் மோனிஷா, சிவரஞ்சனி மற்றும் ஒரு ஆண் நண்பர் என மூவராக கூட்டு சேர்ந்து சுதர்சனை மிரட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்துள்ளனர். அங்கு ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டல் சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயத்துக்கு சுதர்சன் சம்மதிக்காமல் இருக்கவே, அவரை அடித்து துன்புறுத்தி பிளாஸ்டிக்கால் சூடு வைத்துள்ளனர். 

உண்மையை கக்கினார்: 

இவர்களின் சித்ரவதை தாங்க இயலாமல் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட சுதர்சனை கும்பல் விடுவிக்க, நேரடியாக மனைவியிடம் சென்று நடந்த விஷயங்களை கூறி இருக்கிறார். முதலில் கணவரின் மீது ஆத்திரமடைந்த மனைவி, பின் உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நமீதா, மோனிஷா, சிவரஞ்சனி, கணேஷ் என 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Trending #marriage #Love #Affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story