போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!
போதைக்காக ஊசி செலுத்திக்கொண்டவர் உயிரிழந்தார்.
ஊசி மூலம் உடலில் போதை மருந்து செலுத்தும் பழக்கம் கொண்டவர் மரணம் அடைந்தார்.
போதை அடிமை:
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் மது-கஞ்சா போதைப்பொருட்கள் பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மேலும், போதை மாத்திரைகளை கரைத்து ஊசி கொண்டு செலுத்தும் பழக்கத்தையும் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் கொடூரம்.. சுத்தியால் அடித்துக்கொன்று ரீல்ஸ் வீடியோ.. கோவையில் அதிர்ச்சி.!
உடல்நலம் பாதிப்பு:
இவ்வாறாக தொடர்ந்து கேடான பழக்கத்தை தொடர்ந்து வந்த காரணத்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆகாஷ் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். போதை ஊசி பழக்கம் காரணமாக அவரின் நரம்புகளும் தளர்வடைந்தனர்.
மரணம்:
இதற்காக மருத்துவமனையில் தொடர் & தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சோதனை & தடுப்பு நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடஓட விரட்டி கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.. கொலை வழக்கால் நடந்த சோகம்.!