×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 'ஜனநாயகன்' கொடுத்த விழிப்புணர்வு.. சிக்கிய குற்றவாளி.! 

தமிழ்நாடு முதல்வரின் படம் பார்த்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை அம்பலப்படுத்தி குற்றவாளியை அடையாளப்படுத்தினர். 

Advertisement

பாலியல் தொல்லை கொடுத்த நபரை சிறுமி ஜனநாயகன் திரைப்படத்தில் கிடைத்த விழிப்புணர்வால் காட்டிக்கொடுத்தார்.  

ஜனநாயகன் விழிப்புணர்வு: 

தமிழ்நாடு முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் குழந்தைகளுக்கான குட் டச் பேட் டச் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதையும் படிங்க: மயங்கி விழுந்த 16 வயது மாணவி.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்.. போக்ஸோவில் சிக்கிய காதலன்.! 

சிறுமி புகார்: 

இந்நிலையில், ஜனநாயகன் படம் பார்த்த 8 வயது சிறுமி கொடுத்த தகவலால், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, சென்னையில் உள்ள கே.கே. நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 11 வயதுடைய மகன், 8 வயதுடைய மகள் இருக்கின்றனர். 

தகவல்: 

தம்பதிகள் குடும்ப பிரச்சனை காரணமாக சில மாதமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குழந்தைகள் தந்தையுடன் இருக்கிறார்கள். தாய் கோடம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், அவ்வப்போது குழந்தைகளை தனது பணியிடத்துக்கு தாய் அழைத்துச் செல்வது வழக்கம். 

ஜனநாயகன்: 

சம்பவத்தன்று சிறுமி, அவரின் தந்தை ஜனநாயகன் படம் பார்க்க சென்றுள்ளனர். அங்கு வந்த பாலியல் விழிப்புணர்வு காட்சியை கண்ட சிறுமி, தந்தையிடம் தனக்கும் இதுபோல் நடந்ததாக கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை விசாரித்தபோது, தாய் வேலை செய்யும் வீட்டில் இருக்கும் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி இருக்கிறார்.  

புகார்: 

இதனையடுத்து, சிறுமியின் தந்தை இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி பெரியன் என்ற நபரை போக்ஸோவில் கைது செய்தனர். 

இதையும் படிங்க: வாயில் டேப் ஒட்டி வன்கொடுமை.. 5 மாத கர்ப்பத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! மாணவிக்கு நேர்ந்த அவலம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #chennai #8 year old girl #Jana Nayagan Vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story