×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ஸ்டா காதலால் விபரீதம்.. தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை.. திருப்பூரில் வீடுபுகுந்து பயங்கரம்.!  

Tiruppur News: தாய்-மகள் கொலை செய்யப்பட்டனர். 

Advertisement

வீடுபுகுந்து இன்ஸ்டாகிராம் காதலன் அரங்கேற்றிய வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விற்பனை பிரதிநிதி: 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகராட்சி பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். பழனிச்சாமியின் மனைவி தனலட்சுமி (வயது 42). இவர் பனியன் நிறுவனத்தில் டைலராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளின் மகள் பூவரசி (வயது 22). இவர் தனியார் பைக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். 

இதையும் படிங்க: காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.! 

இன்ஸ்டாகிராம்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டியில் வசித்து வருபவர் மணிகுமார். இவரின் மகன் அக்சயன் (வயது 27). கோயம்புத்தூர் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். பூவரசி - அக்சயன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

வலியுறுத்தல்: 

இதனிடையே, பூவரசியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அக்சயன் பூவரசியின் பெற்றோரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விஷயத்துக்கு பூவராசியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னர் பல்லடம் வந்த அக்சயன் விடுதியில் அறையெடுத்து தங்கி தனலட்சுமியின் வீட்டுக்கு தினமும் வந்து திருமணம் தொடர்பாக கட்டாயப்படுத்தி இருக்கிறார். 

கொலை: 

இன்றும் வழக்கம்போல பூவரசியின் வீட்டுக்கு வந்து திருமணம் தொடர்பாக அக்சயன் கட்டாயப்படுத்தி தகராறு செய்துள்ளார். தனலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அக்சயன் காதலியின் தாயை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனை தடுக்க வந்த காதலி பூவரசியையும் வெட்டிச் சாய்த்து இருக்கிறார். 

பரிதாப பலி: 

இந்த சம்பவத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அக்சயனை பிடித்து வைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அக்சயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

இதையும் படிங்க: பணம் சம்பாதிக்க ஆசையா உஷார்? உங்க வங்கிக்கணக்கை வாடகைக்கு விடுறீங்களா? தமிழ்நாடு முழுவதும் 837 பேர் கைது.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Tiruppur #Love #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story