×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்தடுத்து பரவும் டெங்கு.. பீதியில் மக்கள்.. சிறார்களை கவனமாக பார்த்துக்கோங்க மக்களே.! 

Dengue Fever Tamilnadu: டெங்கு காய்ச்சல் சிறார்களுக்கு அதிகம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

பருவகாலம் காரணமாக சிறார்களிடையே டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. 

மருத்துவமனையில் அனுமதி: 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீரப்பாக்கம் ஊராட்சி, விநாயகபுரம் பகுதியில் வசித்து வரும் சிறார்கள் அடுத்தடுத்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். சிறார்களிடையே அதிகம் பரவிய டெங்கு காரணமாக பெற்றோர் & பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: உயிரைப்பறித்த கொசு மருந்து? கோவையில் நடந்த சோகம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் விபரீதம்.! 

அறிகுறிகள்: 

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கின்றனர். சிறார்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் காய்ச்சல், தலைவலி, வாந்தி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. 

கோரிக்கை: 

இதனால் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி நிர்வாகம் தங்களின் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர் & பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: கோவையில் ரணகொடூரம்.. கஞ்சா விற்பனை புகார் கொடுத்ததால் கல்லூரி மாணவர் சித்ரவதை கொலை..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #Chengalpattu #Dengue fever
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story