கணவனின் மனதில் இருந்த அந்த ஒரு எண்ணம்.. கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி.. பகீர் சம்பவம்.!
நடத்தை சந்தேகத்தால் கணவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொலை செய்துவிட்டு மாயமான கணவரை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
தம்பதிகள்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் வசித்து வருபவர் பாபு (வயது 35). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஹாலோபிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பாபுவின் மனைவி தேவி (வயது 34). தம்பதிகளுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
சந்தேகம்:
இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே தேவியின் நடத்தையில் பாபுவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இது ஒருகட்டத்தில் தம்பதிகளுக்கு இடையே குடும்பத்தகராறு உருவாக காரணமாக அமைந்துள்ளது. ஒருகட்டத்தில் கணவரை விட்டு விலகிய தேவி தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அழைப்புக்கு பலனில்லை:
பலமுறை மாமியார் வீட்டுக்கு நேரில் சென்ற பாபு, மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் பலனில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்ற பாபு, மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இரவு நேரத்தில் மாடியில் உறங்கிய குழந்தைகள், காலை வீட்டுக்குள் வந்துள்ளனர்.
கொலை:
அப்போது, தாய் கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருப்பதைக்கண்டு கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு tkaval தெரிவித்தனர்.
விசாரணை:
நேரில் வந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாபுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!