ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!
Virudhunagar News: போதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்தார்.
கணவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சாத்தூரில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், உப்புத்தூர் கிராமம், சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மணி (வயது 35). இவர் கூலித் தொழிலாளி ஆவார். மணியின் மனைவி திவ்யபாரதி (வயது 26). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகின்றன, குழந்தை இல்லை.
போதை தகராறு:
இதனிடையே, தம்பதிகளுக்குள் எப்போதும் குடும்ப பிரச்சனை என்பது இருந்து வந்துள்ளது. இதுமட்டுமல்லாது, மதுபோதையில் வீட்டுக்கு வரும் மணி, எப்போதும் மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சம்பவத்தன்றும் இதுபோல போதையில் வந்த மணி மனைவி திவ்யபாரதியுடன் தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
கழுத்தில் குத்திக்கொலை:
மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தாக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதி, கணவரை கீழே தள்ளி கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மனைவி கைது:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேரில் வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள் திவ்யபாரதியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!