கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!
Crime News Today: கள்ளக்காதல் பிரச்சனையில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.
இளம்பெண் தனது கணவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
Dharmapuri News Today: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி, ஜெல்திம்மனூர் பகுதியில் வசித்து வருபவர் பாக்கியராஜ் (வயது 35). இவர் விவசாயி ஆவார். இவரின் மனைவி நிவேதா (வயது 33). தம்பதிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, 2 மகன்கள் இருக்கின்றனர். இதே ஊரில் வசித்து வருபவர் சிவகுரு (வயது 35). இவர் கூலித் தொழிலாளி ஆவார். சிவகுருவுக்கும், நிவேதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.
கள்ளக்காதல் பஞ்சாயத்து:
இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பாக்கியராஜ், தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். மேலும், முறையற்ற பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்து இருக்கிறார். இந்த விஷயத்தை கண்டுகொள்ளாத நிவேதா தொடர்ந்து சிவகுருவோடு பேசி வந்துள்ளார். இந்த விஷயத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக, நிவேதா தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி இருவரையும் குடித்தனம் நடத்த அனுப்பி வைத்துள்ளார். இதனால் மீண்டும் பாக்யராஜின் இல்லத்துக்கு நிவேதா வந்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!
ரத்த வெள்ளத்தில் சடலம்:
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் நிவேதாவின் கள்ளக்காதல் விஷயம் குறித்து கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாக்கியராஜ் நிவேதாவின் கழுத்தை அரிவாளால் அறுத்துக்கொலை செய்து தப்பிச் சென்றார். பாக்கியராஜின் தந்தை ராஜமேனி இன்று காலை வீட்டுக்கு வந்தபோது, நிவேதா ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நேரில் வந்த அதிகாரிகள் நிவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் பாக்யராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஆயிரம் இருந்தாலும் அவ பொண்டாட்டி.. நீ...' மனைவியை திட்டியதால் கொடூர கொலை.! திடுக் சம்பவம்.!